நிலச்சரிவு பெருந்துயரால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு துணை நிற்பதாகவும், நிதிப் பற்றாக்குறையால் நிவாரணப் பணிகள் தடைபடாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது தனது இதயம் கனத்துவிட்டதாகவும், மறுவாழ்வுப் பணிகளை கேரள அரசுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
வயநாட்டில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள மத்திய அரசிடம் கேரள அரசு, 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கோரி இருப்பது குறிப்பிடத்தக்கது.